லஞ்சம் வாங்கிய கரூர் விஏஓ கைது

329
Spread the love

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா வாழ்வார் மங்கலம் கிராம நிர்வாக அலுவலராக காளியப்பன என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாழ்வார் மங்கலத்தை  சேர்ந்த பொன்னுசாமி என்பவர் வாரிசு சான்றிதழ் வாங்க விஏவிடம் விண்ணப்பித்தார். அதற்கு விஏஓ காளியப்பன் லஞ்சம் கொடுத்தால்தான் சான்றிதழ் தர முடியும் என்று தெரிவித்தார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பொன்னுசாமி கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசில்  புகார் அளித்தார்.

வழக்கு பதிந்த போலீசாரின் அறிவுரைப்படி பொன்னுசாமி இன்று வாழ்வார் மங்கலத்தில் கிராம நிர்வாக அலுவலர் காளியப்பனிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் விஏஓ காளியப்பனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY