Spread the love
காஷ்மீரின் ஜம்மு பஸ் நிலையத்தில் நேற்று கையெறி குண்டு வீசப்பட்டதில் 2பேர் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரின் விசாரணையில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.  அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் சிறுவனை பயன்படுத்தியது தெரிய வந்தது. ரூ. 50 ஆயிரம் கொடுத்து குண்டை வீசச் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.   
இந்த பஸ் நிலையத்தில் குண்டுவீசப்படுவது இது 3–வது முறையாகும். முன்னதாக கடந்த ஆண்டு மே மாதம் குண்டு வீசப்பட்டதில் 2 போலீசார் உள்பட 3 பேர் காயமடைந்தனர். பின்னர் டிசம்பர் 28–ந் தேதி இரவும் பயங்கரவாதிகள் கையெறி குண்டு ஒன்றை வீசிச் சென்றனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY