காதல் மனைவியை எரித்த கணவன்..

44
Spread the love

விழுப்புரம் மாவட்டம், வானூர் பரங்கனியை சேர்ந்த ஜீவாவும் (21), நைனார்பாளையத்தை சேர்ந்த ராஜேஸ்வரியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் 3ம் தேதி காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் குடும்ப வாழ்க்கை 2 மாதம் கூட நீடிக்கவில்லை. கடந்த 3ம் தேதி ராமேஸ்வரி தீக்குளித்ததாக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார் ஜீவா. இது குறித்து வானூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, ராஜேஸ்வரி மண்ணெண்ணெய்  ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகவும், அப்போது, தான் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகவும் ராஜேஸ்வரி குடும்பத்தினரிடம் ஜீவா கூறியுள்ளார். இந்த நிலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராமேஸ்வரி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ஜீவாவை விரும்பி காதல் திருமணம் செய்து கொண்டேன். ஊரடங்கால் ஜீவா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இதனால், என்னிடம் உங்கள் வீட்டில் நகை வாங்கிட்டு வா என்று அடிக்கடி தொந்தரவு செய்தார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரத்தில் ஜீவா, என் மீது மண்ணெண்ணையை  ஊற்றி தீ வைத்தார். இதை வெளியில் சொன்னால் உன் அப்பாவையும், சகோதரனையும் கொன்று விடுவேன் என்று மிரட்டினார்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஜீவாவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். ஆபத்தான நிலையில் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் ராஜேஸ்வரி சிகிச்சை பெற்று வருகிறார். காதல் மனைவியை கரம்பிடித்த 2 மாதத்தில் வரதட்சணை கொடுமையில் அவரை கணவனே தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY