காதலில் விபரீதம்.. பெண் டாக்டர் சுட்டுக்கொலை…

203
Spread the love

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த மானசா(24), எர்ணாகுளம் கோதை மங்கலத்தில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் படித்து முடித்துவிட்டு கல்லூரி அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். அவருடன் படித்த சக மருத்துவர்களும் அவருடனேயே தங்கியிருந்து பயிற்சி மருத்துவம் பார்த்து வந்துள்ளனர்.

மானசா, ராகில் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் காதலன் ராகிலின் நடவடிக்கை பிடிக்காமல் அவரை வெறுத்து ஒதுக்கி இருக்கிறார். இனிமேல் காதலை தொடர முடியாது . அதனால் என் பின்னால் வருவதை என்னுடன் பேசுவதையும் நிறுத்தி விடு என்று கண்டித்திருக்கிறார். ஆனால் மானசாவை விடமுடியாமல் பிடிவாதமாக இருந்திருக்கிறார் ராகில்.

இந்நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் சக பயிற்சி மருத்துவர்கள் உடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறார் மானசா. அப்போது திடீரென்று வீட்டிற்குள் நுழைந்த ராகில், மானசா விட பேசியிருக்கிறார். மானசா பேச விரும்பவில்லை என்று சொன்னதால், திடீரென்று அவரது கையை பிடித்து இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்று இருக்கிறார் ராகில்.

அறைக்குள் சென்றதும் உள்பக்கமாக பூட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் மாணவியின் நண்பர்கள் அனைவரும் பதறி அடித்துக் கொண்டு கதவை தட்டியுள்ளனர். கதவைத் திறக்கவே இல்லை. ஆனால் சிறிது நேரத்தில் துப்பாக்கி சத்தம் தொடர்ந்து கேட்டுள்ளது. இதையடுத்து அதிர்ந்து போன மானசாவின் நண்பர்கள் அக்கம்பக்கத்தினரிடம் சொல்லி அவர்களின் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போனபோது, மானசாவும் ராகிலும் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளனர். தனக்கு கிடைக்காத மானசா யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று துப்பாக்கியுடன் வந்த ராகில், மாணவியை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்கிறார் என்ற விவரம் தெரியவந்தது.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து மானசா- ராகில் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மானசா கொலை, ராகுல் தற்கொலை குறித்து எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தானும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

LEAVE A REPLY