கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது… திருச்சியில் பரபரப்பு

153
Spread the love

கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர்கள் மூவர் கைது – திருச்சி உறையூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (54 ). இவர் மேலப்புலி வார்டு ரோடு பகுதியில் மெக்கானிக் ஷாப் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சென்ற ஜீவா நகரை சேர்ந்த சுதர்சன், ஸ்டீபன், ஈபி ரோட்டை சேர்ந்த தினேஷ் குமார் ஆகிய மூவரும் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது – திருச்சி தில்லைநகர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் ( 20 ). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் ராம்குமார் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு உள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

70 குழந்தைகள் உட்பட 150 நரிக்குறவர்கள் மீது வழக்கு – திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நரிக்குறவர்கள், தங்கள் பகுதியில் உள்ள பள்ளிக்கு நிதி வழங்க கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக 70 குழந்தைகள் உள்பட 150 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

LEAVE A REPLY