கத்தியை காட்டி மிரட்டிய திருச்சி வாலிபர் கைது…

78
Spread the love

திருச்சி தென்னூர் பட்டாபிராமன் சாலை பகுதியை சேர்ந்தவர் ஜமால் இப்ராஹிம் (34) இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூர் செல்வதற்காக பஸ் நிலையத்திற்குள் நின்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் திடீரென இவரிடம் வந்து கத்தியை காட்டி பணம் தருமாறு மிரட்டியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த ஜமால் இப்ராகிம் அங்கிருந்து தப்பி சென்று கண்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் கண்டோன்மெண்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை மடக்கி பிடித்தனர்.விசாரணையில் திருச்சி கருமண்டபம் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த குமரன் என்கிற முத்தமிழ் குமரன் (32) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து கத்தியைக் காட்டி மிரட்டிய வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY