கேரள விமான விபத்து .. பலி 15.. படங்கள்

873
Spread the love
துபாயில் இருந்து IX1344 ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் வந்தே பாரத் திருப்பி அனுப்பும் திட்டத்தின்  ஒரு பகுதியாக இயக்கப்பட்டது. 191 பயணிகளுடன் வந்த விமானம்  கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமானத்தில் இரவு 7:40 மணியளவில் தரையிறங்க தொடங்கியது. விமானம் 35 அடியில் இறங்கும்போது இரண்டு துண்டாக உடைந்து உள்ளது. இந்த விபத்தில் விமானிகளில் 2 பேர், 1 குழந்தை உள்பட 15 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 15 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் 125 காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
இறந்த விமானிகளில் ஒருவர் கமாண்டர் கேப்டன் தீபக் சாத்தே என அடையாளம் காணப்பட்டுள்ளார்  விமானத்தில்  காயமடைந்தவர்கள்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. விமானத்தில் தீ பிடிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் 10 குழந்தைகள் உள்பட 174 பயணிகள்,  விமான பைலட்டுகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் இருந்தனர்.
 

LEAVE A REPLY