சுவீடன் நாட்டு மன்னராக இருப்பவர் 16-ம் கார்ல் கஸ்தாப். இவரது மனைவி ராணி சில்வியா. இவர்கள் இருவரும் அரசு முறை பயணமாக இந்தியா வந்திருக்கின்றனர்.

ஸ்வீடனின் ஸ்டோக்கோமில் இருந்து அவர்கள் டெல்லிக்கு தனி விமானத்தில் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விமானத்தில் கடைசி நேரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானத்தை பயணிக்க முடியவில்லை.

இதையறிந்த மன்னரும், ராணியும் டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய முடிவு செய்தனர். பின்னர் ஏர்-இந்தியாவின் போயிங் 787 டீரிம்லைனர் விமானம் புறப்பட சில மணி நேரத்திற்கு முன் இருவருக்கும் டிக்கெட் புக் செய்யப்பட்டது. இதையடுத்து மன்னரும், ராணியும் க்கு அந்த விமானத்தில்  பயணம் செய்தனர். விமானத்தில் மன்னருக்கும்,ராணிக்கும் இந்திய உணவு பரிமாறப்பட்டது. அதை அவர்கள் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டனர்.

டெல்லி விமான நிலையம் வந்ததும் மன்னர் தனது லக்கேஜை தன்னுடன் வந்த அதிகாரியிடம் தராமல் தானே தூக்கி வந்தார்.அவரது எளிமையை பார்த்து பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

LEAVE A REPLY