கஷ்டத்த சொல்ல முடியுமா? .. நேருவின் ‘லகலக’ பேட்டி..ஆடியோ

763
Spread the love

உள்ளாட்சித் தேர்தல் குறித்து கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துவிட்டு திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நேரு  இன்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அளித்த பதில்..

கேள்வி: பங்கீடு முடிந்து விட்டதா?

பதில்: திருச்சி மாவட்டத்தில் தொகுதி பங்கீடு முடிந்து இருக்கிறது.. அவர்கள் கேட்டதெல்லாம் எங்களால் கொடுக்க முடியவில்லை எந்த சங்கடம் இருந்தாலும் உங்க கிட்ட சொல்ல முடியுமா?

கேள்வி: திருச்சி மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது?

பதில்: திருச்சி மாநகராட்சிய 30 வருஷமா பெண்களுக்கு தான் ஒதுங்குறாங்க.. நீங்க தான் கேக்கணும்.. 

கேள்வி: திமுக  கூட்டணியின் வெற்றி வாய்ப்பு?

பதில்: தோக்கும் போதே ஜெயிப்போமுனு சொல்லுவோம். இப்ப உண்மையிலேயே நாங்க ஜெயிக்கப்போறோம் அப்ப நாங்க என்ன சொல்லுவோம்.

கேள்வி:தேர்தல் நியாயமாக நடக்குமா?

பதில்: அதிகாரிகள நம்புறோம். தோத்தத ஜெயிச்சதா சொல்ல வேணாம்.. ஜெயிச்சத ஜெயிச்சுட்டோனு சொன்ன போதும்.. இப்படியாக நேருவின் ‘லகலக’ பேட்டி ஆடியோ போகிறது…

LEAVE A REPLY