திமுகவில் 40 ஆண்டு உழைப்பு….முதன்மைச்செயலாளராகிறார் நேரு

1193
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்களை தவிர்த்து மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர். கூட்டத்தில், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. கூட்டணி கட்சிகளுடனான இடப்பகிர்வு குறித்து ஆலோசனை செய்யப்படுவதுடன், வெற்றிக்கு புதிய வியூகமும் வகுக்கப்பட இருக்கிறது. அத்தோடு, திருச்சியில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. மேலும், கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் தமிழக சுற்றுப்பயணம் குறித்தும், மாநில நிர்வாகத்தில் சில மாற்றங்கள் செய்வது குறித்தும், ஒரு சில மாவட்ட செயலாளர்களை மாற்றுவது குறித்தும் முடிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்ட செயலாளர் கேஎன் நேருவிற்கு கட்சியின் முக்கிய பதவியான முதன்மைச் செயலாளர் பதவி வழங்கப்படுவது குறித்த முடிவும் எடுக்கப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகாலத்திற்கும் மேலான அரசியல் பயணத்தில் 30 ஆண்டுகாலமாக மாவட்ட செயலாளராக மட்டுமே இருந்து கொண்டு மாநாடுகள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் என கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் நேருவிற்கு காலதாமதமாக மாநிலப்பொறுப்பு வழங்கப்படுவது வருத்தம் என்றாலும் இப்போதாவது மேலிடம் முடிவு எடுத்திருக்கிறதே என நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியில் உள்ளனர். இது  தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.. 

LEAVE A REPLY