கொடைக்கானலுக்கு இ-பாஸ் தேவையில்லை…

158
Spread the love

கொடைக்கானலுக்கு இனி இ- பாஸ் இன்றி சுற்றுலாப் பயணிகள் செல்லலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொடைக்கானல் மலைப்பகுதிக்கு இனி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் இன்றி, பொதுப்போக்குவரத்து பேருந்துகளில் வந்து செல்லலாம். முதல்கட்டமாக வெள்ளி நீர்வீழ்ச்சி பூங்காவினுள் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்படும் என்று அவர் தொிவித்து உள்ளார்.

LEAVE A REPLY