கோமாவிற்கு சென்ற பிரபல நடிகர்…

185
Spread the love

சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகர் வேணு அரவிந்த். இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘காதல் பகடை’  என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர்,  காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். சீரியல்களை தவிர்ந்து திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் அன்பை பெற்றவர். சில டிவிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சன் டிவியில் ஒளிப்பரப்பான வாணி ராணி, சந்திரகுமாரி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். இதில் வாணி ராணி சீரியலில் அவரின் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சமீபத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்ட வேணு அரவிந்த், சிகிச்சைக்கு பிறகு நலம்பெற்றார்.  இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் வேணு அரவிந்த் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவருக்கு நிமோனியா வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மூளையில் கட்டி வந்து அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றியதால் கோமா நிலைக்கு சென்றதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேணு அரவிந்த் விரைவில் நலம்பெற வேண்டி அவரது ரசிகர்களும், சின்னத்திரையினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.  

LEAVE A REPLY