கேரள வாலிபருக்கு கொரோனா வைரஸ் உறுதி…

513
Spread the love

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் இந்த வைரசால் 170 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்த 800 க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு நடத்திய சோதனையில் சீனாவின் வுஹான் பல்கலை.,யில் இருந்து வந்த கேரள மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர், தனி கண்காணிப்பு பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY