கொரோனா வைரஸ் இரண்டு விதம்… தகவல்

522
Spread the love
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இரண்டு விதமாக உள்ளதாகவும், அதில் ஒன்றை விட மற்றொன்று வேகமாக தீவிரமாக பரவும் தன்மை கொண்டது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொடிய கொரோனா வைரஸ் இரண்டு வகையாக உள்ளது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கொரோனா வைரஸ் இரண்டு விதமாக உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இந்த இரண்டில் ஒன்று மற்றொன்றை விட மிகவும் ஆக்ரோஷமான மற்றும் தொற்று நோய் என்று கூறியுள்ளனர். 
 
பிகிங் பல்கலைக்கழகம் மற்றும் ஷாங்காயின் இன்ஸ்டிடியூட் பாஸ்டர் ஆய்வாளர்கள். இந்த வைரஸ் எல் மற்றும் எஸ் என அழைக்கப்படும் இரண்டு வகைகளாக மாற்றப்பட்டிருப்பதை அடையாளம் கண்டுள்ளனர். ஆர்என்ஏ வைரஸ்களின் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸில், பிரிக்கப்பட்டுள்ள எல்-வகை மிக விரைவாக பரவுகிறது.
 
எஸ்-வகையுடன் இதை ஒப்பிடும்போது ஆக்ரோஷமாக செயல்படுகிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எல் வகை வைரஸ் உலகெங்கிலும் 70 சதவீதம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது விரைவாக பரவுவதன் காரணமாக இத்தனை சதவீதம் பேருக்கு பரவியுள்ளது. கொரோனா வைரசால் சில நோயாளிகள் வைரஸின் இரண்டு விதமாக பாதிக்கப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்ததுள்ளனர். பேராசிரியர் ஜியான் லூ மற்றும் டாக்டர்ஜீ குய்  தலைமையிலான குழு வுகானில் கொரோனா வைரஸ் பரவிய தொடக்கத்தில், எல் வகை மிகவும் பொதுவானது என்று கூறியது.
 
வுகானில் கொரோனா பரவிய  ஆரம்ப கட்டங்களில் எல் வகை கொரோனா வைரஸ் அதிகம் காணப்பட்டாலும், எல் வகை 2020 ஜனவரி மாத தொடக்கத்தில் குறைந்துவிட்டது. மனித தலையீடு எல் வகைக்கு மிகவும் கடுமையான தேர்ந்தெடுக்கப்பட்ட அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
அதே சமயம் ஒரே மாதிரியான வைரஸ் உலகம் முழுவதும் பரவுகிறதா என்பதை உறுதிப்படுத்த மற்ற நாடுகளில் பாதிக்கப்பவர்களின் நிலையை சோதனைகள் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த நோய்க்கு சிகிச்சையளிக்க இதுவரை எந்த சிகிச்சையும் கிடைக்காததால், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விஞ்ஞானிகள் வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க கடுமையாக உழைத்து வருகின்றனர். உலகளவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  பல லட்சத்தை தொட்டு உள்ளது. பல நாடுகளில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY