கொரோனா வைரஸால் 361-பேர் பலி…

146
Spread the love
 
சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி அந்நாட்டு மக்களிடையே தொடர் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.  வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா  வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், யுகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இப்போது இந்தியா உள்பட 25 நாடுகளுக்கு பரவியுள்ளது. 
 
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் 16,000 ஆயிரம் பேர்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 9,618 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 478 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வௌியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY