உட்கார்ந்து மனுவை வாங்கிய கலெக்டர்… டென்ஷனான அதிமுக எம்எல்ஏக்கள்..

261
Spread the love

தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அரசு விழாக்களுக்கு அதிமுக எம்.எல்.ஏ.,க்களை அழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களான முன்னாள் அமைச்சர் வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமன் உள்ளிட்டோர், நேற்று கோவை கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.வேலுமணி மனு கொடுக்க அருகில் சென்றார். கலெக்டர் சமீரன் அமர்ந்து கொண்டே மனுவை பெற தயாரானார். இதை கவனித்த மற்ற எம்.எல்.ஏ.,க்கள், ‘ஏன் எழுந்து நின்று வாங்க மாட்டீர்களா’ எனக் கேட்டனர். சுதாரித்த கலெக்டர்எழுந்து, மனுவை வாங்கினார். அப்போது பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமன், ”இது மிகவும் தவறு சார். நான் 25 வருஷமா மக்கள் பிரதிநிதியா இருக்கேன்,” என கலெக்டரை பார்த்து கூறினார்.மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், ”என்ன பழக்கம் இது, புதுப் பழக்கமா இருக்குது,” என, கோபத்துடன் கூறினார்.

LEAVE A REPLY