கோவையில் கொரோனா வைரஸ்…. வௌியில் நடமாட தடை

21394
Spread the love

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, மலேசியா, தாய்லாந்து, இலங்கை என்று உலகம் சுற்ற தொடங்கி  இருக்கிறது. உஹான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐ தாண்டி ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்னர். சீனாவையும் தாண்டி, ஹாங்காங், மெக்சிகோ மற்றும் தைவானிலும் கொரோனா வைரஸ் நடமாடி வருகிறது. ஆசிய கண்டனத்தின் மிக முக்கிய நாடான இந்தியாவிலும் இதன் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப் பட்டு வருகிறது. சீனாவில் இருந்து வரும் பயணிகள் கடும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.

உஹான் நகரில் 250 இந்தியர்கள் இன்னும் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் பலர் அங்கிருந்து வெளியேறி இந்தியா வந்துவிட்டனர். வெகு சிலரே சீனாவில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந் நிலையில், சீனாவுக்கு சென்று திரும்பி கோவைக்கு வந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டது. பொள்ளாச்சியை சேர்ந்த 2 பேர், கோவையைச் சேர்ந்த 4 பேர், சென்னை மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 8 பேர் சீனாவில் இருந்து கோவை வந்துள்ளனர்.

அவர்களை பரிசோதித்ததில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லக்கூடாது, 28 நாட்கள் பொது வெளியில் செல்லாமல் இருக்கவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரைகளும், கட்டுப்பாடுகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும், அவர்களை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY