போதைக்காக.. சானிடைசரை தண்ணீரில் கலந்து குடித்தவர் பலி

197
Spread the love

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் பெர்னான்டெஸ் (30). இவர் சூலூரில் உள்ள தனியார் கேஸ் ஏஜென்சியில் சிலிண்டர் விநியோக பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். சிலிண்டர்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும்போது கொரோனா பாதிப்பிற்காக ஏஜென்சி நிறுவனம் சானிடைசர் வழங்கி இருந்தது.

குடி பழக்கம் கொண்ட பெர்னான்டெஸ் சானிடைசரில் ஆல்கஹால் இருப்பதை அறிந்த கடந்த சிலநாட்களாக அதனுடன் தண்ணீர் கலந்து போதைக்காக குடித்து வந்தாக தெரிகிறது. இன்று அதிகாலை உடல்நிலை பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்த பெர்னான்டெஸ்யை, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY