கோயிலில் விழுந்து வணங்கும் முறைகள்….

234
Spread the love

ஆலயத்தில் சுவாமி கும்பிடும்போது ஆண்கள் பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கொண்டு முன்நெற்றி தரையில் தொட உடல் முழுவதும் தரையில் படுமாறு விழுந்து வணங்க வேண்டும்.

  • கோயிலில் பெண்கள் வணங்கும் போது கூந்தல் தரையில் விழக்கூடாது. மண்டியிட்டு  குனிந்து வணங்க வேண்டும்.
  • பெருமாள் கோயிலில் தீர்த்தம் வாங்கும்போது இடது கைக்கும், வலது கைக்கும் நடுவில் முந்தானைத் துணியை வைத்து தீர்த்தம் வாங்க வேண்டும்.
  • குத்துவிளக்கு ஏற்றும்போது ஒரு திரி மட்டும் போடக் கூடாது. இரு திரி இட்டு ஒரு முகம் ஏற்ற வேண்டும்.
  • தெற்கே பார்த்து நின்று  கோலம் போடக்கூடாது. போடுகின்ற கோடு தெற்கு பக்கமாய் முடியக் கூடாது.
  • பெண்கள் முந்தானையை தொங்க விட்டு நடக்கக் கூடாது. 

LEAVE A REPLY