நெல் சாகுபடியில் கலப்பு அதிகமானதால் விவசாயிகள் கவலை….

99
Spread the love

தமிழக அரசு ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறப்பது வழக்கம் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணை குறித்த நேரத்தில் திறக்கப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடி பெரிய அளவில் செய்ய முடியாமல் போனது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி குறித்த நேரத்தில் தமிழக அரசு மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டது இதனை தொடர்ந்து டெல்டா பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்கினார். அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இந்தலூர் மற்றும் கடம்பக்குடி பகுதியில் குறுவை சாகுபடிக்காக திருச்சியில் உள்ள (சரஸ்வதி ஏஜென்சிஸ் திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ளது) ஒரு தனியார் விதை மற்றும் பூச்சி மருந்து விற்கும் நிறுவனத்தில் 60சிற்பம் 36 என்ற நெல் ரக விதையை கொள்முதல் செய்து நாற்று விட்டு நடவு செய்துள்ளனர்.

அப்படி நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் பாதி கதிர்மணி வந்து பால் ஏரியும் பாதி கதிரே வராமலும் உள்ளது. இப்படி கலப்பு பயிர் நடவில் அதிகமாக உள்ளதால் விவசாயிகள் எப்படி வயலை அறுவடை செய்வது என்று கவலை அடைந்துள்ளனர். கதிர் வந்ததை பார்த்தால் கதிர் வராதது வீணாகி விடும் என்றும் கதிர் விவரத்தைப் பார்த்தால் கதிர் வந்தது வீணாகிவிடும் என்றும் இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் மேலும் சம்பா சாகுபடி தள்ளிப்போகும் சூழ்நிலையும் ஏற்படும் என்றும் அஞ்சுகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தாங்கள் வழங்கிய விதை நெல்லில் கலப்பு இருப்பது குறித்து புகார் தெரிவித்த தோடு பூதலூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர் அதன் அடிப்படையில் பூதலூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அதிகாரிகள் மற்றும் அந்த தனியார் விதை நிறுவன உரிமையாளர் ஆகியோர் வந்து பார்வையிட்டதோடு அவர்தான் கொள்முதல் செய்தது தரங்கம்பாடி பகுதியில் என்றும் அவர்களு இது குறித்து தகவல் தெரிவிப்பதாக கூறியதோடு அவர்களையும் பாதிக்கப்பட்ட விவசாய பகுதிகளுக்கு அழைத்து வந்து பார்வையிட்டனர்.

அப்போது விவசாய நிலங்களில் இருந்த நெல் மணிகளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே இதில் எந்தெந்த ரக நெல் விதை கலந்துள்ளது என்பது தெரியவரும் என்றும் கூறி சென்றவர்கள் அதன் பிறகு கண்டுகொள்ளவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதோடு என்ன செய்வது என்று தெரியாமல் கவலை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை பெற்று தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY