திருப்பூரைச் சேர்ந்த பிரபல பனியன் கம்பனி தொழிலதிபர் சூர்ய பிரகாஷ் என்பவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தொழில் நஷ்டம் காரணமாக பெங்களூர் செல்வதாக கூறி, கோவை வந்துள்ளார். அவர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஆறாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். தொழில் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.