தனித்து வாழ விரும்பும் பெண்கள்..

75
Spread the love
நீங்கள் தனியாகவே 35 வயது வரை இருந்து பழகி விட்டால் பின்னர் திருமணமான பிறகு உங்களின் வாழ்க்கை துணையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை கண்டிப்பாக விரும்ப மாட்டீர்கள் அல்லவா? இது ஒரு முக்கிய காரணம் தனித்து வாழ்வதில். சந்தோஷமாக 35 வயது வரை தனியாக வாழ்ந்துவிட்டால், உங்களால் மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கை வாழப் பிடிக்காது..  அதுவும் நீங்கள் பார்த்த கல்யாணமான தம்பதிகள் தினசரி சண்டை போடுபவர்களாகவும், சந்தோஷமான வாழ்க்கை வாழாமலும், ஏமாற்றங்களை சந்தித்தவர்களாகவும் இருப்பதை பார்த்திருந்தால் அது இன்னமும் கடினமாகி விடும்.
 
பின்னர் திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு. தனித்து வாழ்வதின் சிறப்பம்சம் என்பதே உங்கள் மனதிற்கு பிடித்தவருடன் நினைத்த நேரத்தில் இருக்கலாம். இது தான் பெண்கள் மிக முக்கிய காரணமாக இருக்கிறது தனித்து வாழ்வதற்கு.

LEAVE A REPLY