மோடியின் திடீர் லடாக் பயணத்தால் .. உலக அளவில் பரபரப்பு

153
Spread the love
லடாக்கில் இந்திய-சீன படைகள் இடையே ஏற்பட்ட மோதலில்  20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு எல்லையில் போர் பதற்றம் உருவானது. பதற்றத்தை தணிக்க இருதரப்பிலும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வுருகின்றன.  இதற்காக உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும் இரு நாடுகளின் படைகளும் குவிக்கப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது. சீனாவிற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் வாலாட்டினால் பொறுத்துக்கொள்ள முடியாது என இந்தியா எச்சரித்துள்ளது.  லடாக்கில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் லடாக்கில் உள்ள லே பகுதிக்கு இன்று திடீரென பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்குள்ள நிலைமை மற்றும் பாதுகாப்பு நிலவரங்களை ஆய்வு செய்தார். அவருடன் முப்படை தளபதி பிபின் ராவத்தும் ஆய்வு செய்தார். 

LEAVE A REPLY