கல்வான் இந்தியாவுக்கு சொந்தமானது… லடாக்கில் மீண்டும் மோடி பேச்சு

130
Spread the love

இந்திய – சீன எல்லையில் பதட்டமான சூழ்நிலை உள்ள நிலையில் லடாக்கிற்கு பிரதமர் மோடி  இன்று திடீர் பயணம் மேற்கொண்டார். அங்கு ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். எல்லையில் தற்போதைய நிலவரம் பற்றி கேட்டறிந்தார். பின்னர் இந்திய ராணுவத்தினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது…  உங்கள் வீரமிக்க செயலால் இந்தியாவின் வலிமையை உலகிற்கே தெரியப்படுத்தி இருக்கிறோம். நீங்கள் சேவையாற்றிக் கொண்டிருக்கும் உயரமான மலைப் பகுதிகளை விட உங்களது தைரியம் பெரியது. கல்வான் பள்ளத்தாக்கு  பகுதியில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். உங்களின் வீரமும், பெருமையும் இந்தியாவின் ஒவ்வொரு வீடுகளிலும் பேசப்படுகின்றன.

இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது. நாடு தற்போது உடைக்க முடியாத நம்பிக்கையை கொண்டிருக்கிறது. கல்வான் பள்ளாத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை உறுதியுடன் கூறுகிறேன். இந்திய வீரர்களின் தைரியம், மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள். அமைதியை விரும்பும் நாம் தேவைப்பட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்கவும் விரும்புகிறோம். இந்திய ராணுவத்தின் நெருப்பு போன்ற ஆக்ரோசத்தை எதிரிகள் பார்த்துள்ளனர். அமைதியை எதிர்பார்த்தாலும் நமது நிலத்தை பாதுகாக்கும் விவகாரத்தில் அச்சம் கொள்ளப்போவதில்லை. நாடு பிடிக்கும் காலம் என்பது மலையேறிச் சென்றுவிட்டது – எனது முன்னாள் பெண் ராணுவ வீரர்கள் இருப்பதைக் காண்கிறேன். போர்க்களத்தில் இதுபோன்று அனைவரது ஒத்துழைப்பையும் காணும் போது மிகவும் நம்பிக்கையூட்டும் வகையில் இருக்கின்றது.  எல்லைப் பகுதிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்த நிதியை மூன்று மடங்காக அதிகரித்துள்ளோம் இவ்வாறு மோடி பேசினார்.. 

LEAVE A REPLY