சூட்டிங்கில் விபத்து.. லைகா மீது 4 பிரிவுகளில் வழக்கு

221
Spread the love

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள இவிபி படப்பிடிப்பு தளத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாயினர். இந்நிலையில் படத்தின் இணை இயக்குனர் குமார் நசரேத் பேட்டை காவல் நிலையத்தில் லைகா நிறுவனத்தின் மீது புகார் கொடுத்துள்ளார். அதில் சூட்டிங்கிற்கு லைகா நிறுவனம் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்துதரப்படவில்லை, குறிப்பாக கிரேன் உரிமையாளர் அஜாக்கிரதையாக இருந்துள்ளார். என புகாரில் தெரிவித்துள்ளார். இதனிடையே கிரேன் உரிமையாளர், லைகா புரொடக்‌ஷன் மேனேஜர் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY