2ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு?

725

உள்ளாட்சி தேர்தலை அறிவித்து, டிசம்பர், 2 முதல், நடத்தை விதிகளை அமல்படுத்த, மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகளில், 1.50 லட்சம் பதவிகள் உள்ளன. இப்பதவிகளுக்கு தேர்தல் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. டிசம்பர், 13க்குள் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, அது தொடர்பான அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

எனவே, தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டமும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., வழக்கு உட்பட, மொத்தம், ஆறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனாலும், தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு, மாநில தேர்தல் ஆணையம் தயாராகி விட்டது. டிசம்பர், 2ம் தேதி, திங்கள் கிழமை முதல், தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த, தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., தொடர்ந்த வழக்கின் முடிவும் தெரிந்து விடும் என, ஆணையம் எதிர்பார்க்கிறது.

LEAVE A REPLY