Spread the love

பாகிஸ்தானின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில்  அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகுவில் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி சர்ஹாத் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ரி  சார்பில் (எஸ்.சி.சி.ஐ.பி) கடந்த 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை இந்த மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் பெல்லி டான்ஸ் (ஆபாச நடனம்) நிகழ்ச்சியும் அவ்வப்போது நடத்தப்பட்டது.  

இது தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெல்லி டான்ஸ் எதற்கு? என்று சமூக வலைத்தளங்களில் சரமாரியாக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.  டான்ஸ் வீடியோவை பகிர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர், பாகிஸ்தானுக்கான முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெல்லி நடன கலைஞர்களை வைத்து முதலீடுகளை ஈர்க்க முயற்சி என பதிவிட்டிருந்தார். 
.
 

LEAVE A REPLY