ஒரு சொத்து காட்டுங்க பார்க்கலாம்…கபில்சிபல் ஆவேச வாதம்

240
Spread the love

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ ப.சிதம்ரத்தை கைது செய்துள்ளது. இந்நிலையில்  சட்டவிரோத பணப்பறிமாற்றம் தொடர்பாக அமலாக்க துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரி சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  ப.சிதம்பரம் தரப்பில் ஆஜராகிய கபில் சிபல் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நடப்பது நீதிமன்ற விசாரணை அல்ல. மீடியா விசாரணைதான். குற்றம் சாட்டப்பட்டவருக்கு தெரியாத விஷயங்கள் மீடியாக்களுக்கு தெரிகிறது. சிதம்பரத்துக்கு வெளிநாட்டில் இருக்கும் ஒரு சொத்து குறித்து ஆதாரம் காட்டினால்  இந்த ஜாமின்  மனுவையே வாபஸ் பெறுகிறேன். சிபிஐ விசாரணையில் சிதம்பரத்திடம் டுவிட்டரில் கணக்கு இருக்கிறதா? அதை பயன்படுத்துகிறீர்களா என்று கேட்கப்படுகிறது. அவர்களின் விசாரணை லட்சணம் இதுதான் என்றார்.

அதற்கு அமலாக்க துறை சார்பில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு தந்த பின்தான் பத்திரிகைகளுக்கு வழக்கு விபரம் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. வாதம் தொடரும் நிலையில் வழக்கை பிற்பகலுக்கு  நீதிபதிகள் ஒத்திவைத்தனர். முன்னதாக டெல்லி ஐகோர்ட் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உரிய கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தியது. இந்த வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா என்பது இன்று மாலை தெரிய வரும்.

LEAVE A REPLY