Spread the love
போலந்து நாட்டை சேர்ந்த அலிக்ஜோ வன்ட்கோ என்ற 11 வயது சிறுமி கோவாவில் தங்கி படித்து வருகிறார். மல்டிபில் என்ட்ரி விசா பி2 மூலம் அவரை பார்க்க சிறுமியின் தாய் மார்த்தா கோட்லர்ஸ்கா வந்திருந்தார். இந்நிலையில் அனுமதி பெற்றதை விட கோட்லர்ஸ்கா கூடுதல் நாட்கள் தங்கியதாக உத்ரகாண்ட் மாநில அரசு குற்றம் சாட்டி அவரை கறுப்பு பட்டியலில் வைத்தது. பின்னர் விடுமுறையில் மகளை அழைத்துச் செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து தற்போது சிறுமி தாயுடன் போலந்தில் இருக்கிறார். தாய் இந்தியா வர முடியாது என்பதால் பள்ளி திறந்தும் சிறுமியால் வர இயலவில்லை. இந்நிலையில் சிறுமி பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: 
 

“தற்போது நான் என் அம்மாவுடன் இருந்தாலும் இந்தியாவைப் பற்றிய நினைவாகவே இருக்கிறேன். தனிமையில் இருப்பதாகவே உணர்கிறேன். இந்து கலாசாரத்தில் மிகுந்த ஈடுபாடுள்ள நான், பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களுக்கெல்லாம் சென்றுள்ளேன். இந்தியா திரும்ப எனக்கு உதவும்படி சிவனையும், நந்தா தேவியையும்தான் தினமும் வேண்டுகிறேன்.

கோவாவிலுள்ள எனது பள்ளிக்கு செல்லமுடியாததாலும் அங்குள்ள விலங்கு மீட்பு மையத்தில் நான் பராமரிக்கும் பசுக்கள், நான் இல்லாமல் தவித்துப் போகுமே என்ற மன உளைச்சல் காரணமாக தூக்கமின்றித் தவிக்கிறேன். கறுப்பு பட்டியலிலிருந்து எனது தாயின் பெயரை நீக்கவேண்டும் என்று அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

LEAVE A REPLY