கல்வி நிறுவனங்களில் இடதுசாரிகள்.. 200 கல்வியாளர்கள் பிரதமருக்கு கடிதம்

130

நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் சூழலை மோசமாக்கும் இடதுசாரி அமைப்புக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்கலை., துணைவேந்தர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில்  மாணவர்கள் அரசியல் என்ற பெயரில் கல்வி நிறுவனங்களின் சூழலை குலைத்து இடதுசாரி சிந்தனைகளை திணிக்கிறார்கள். ஜே.என்.யு., முதல் ஜாமியா வரை, இடதுசாரி அமைப்புக்களின் சிறு குழுக்கள் கல்வி நிறுவனங்களின் சூழலை சீர்குலைக்கும் வகையில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் உள்ளன, என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கல்வி நிறுவனங்களில் இடதுசாரிகளின் அராஜம்  என்ற தலைப்பில் குடியுரிமை திருத்த சட்டம், ஜேஎன்யு.,வில் சமீபத்தில் நடந்த வன்முறை உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிராக பல்கலை.,களில் போராட்டங்கள் தூண்டி விடப்படுவதாக 208 கல்வியாளர்களும் தங்களின் கடிதத்தில் குற்றம்சாட்டி உள்ளனர். இடதுசாரி கொள்கைகளால் கல்வி நிறுவனங்களில் போராட்டங்கள், தர்ணாக்கள், மூடல்கள் அதிகரித்து வருவதை பிரதமர் தலையிட்டு தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்கள் தங்களின் கல்வி வாய்ப்பை இழப்பதுடன், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்கள் இதனால் கடுமையாக பாதிப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY