கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்ட கலெக்டராக இருக்கும் ரோகிணி செந்தூரி .இவர் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் சொந்த காரில் வெளியே சென்ற போது, அவரது காரின் டயர் பஞ்சராகியுள்ளது. இதனால் ரோகிணி சிந்தூரி தமது காரில் இருந்த ஜாக்கி உதவியுடன் பஞ்சரான டயரை கழற்றி ஸ்டெப்னி டயரை மாட்டி உள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் பெண் ஒருவர் தானே கார் டயரை கழற்றி மாட்டியதை பார்த்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தன்னம்பிக்கையுடன் செயற்பட்ட மாவட்டகலெக்டர் ரோகினி செந்தூரியை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆளும் கட்சியினர் எதிர் கட்சியினர் என்று பாகுபாடு பார்க்காமல் தவறு செய்தால் தட்டிக் கேட்பதில் அஞ்சாதவர் என்று பெயர் பெற்றவர் ரோகினி செந்தூரி என்பது குறிப்பிடத்தக்கது.