திருச்சி திருவெறும்பூரில் மின்னல் தாக்கி இருவர் பலி…

1602
Spread the love

கடலூர் மாவட்டம் திட்டக்குடி கிளிமங்கலத்தைச் சேர்ந்தவர்  வேலாயுதம் (60), சங்கர் (55) உட்பட சிலர் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டை பகுதியில் தங்கி சம்பா ஒரு போக விவசாய நடவு பணியில் கூலி வேலை செய்து வந்துள்ளனர்.  இந்நிலையில் திருவெறும்பூர் பகுதியில் மாலை  பலத்த மழை பெய்துள்ளது. இதனால் விவசாய பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மழைக்கு ஒதுங்குவதற்காக வயல் வரப்பு வழியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் இடி தாக்கி உள்ளது. இதில் மின்னல் தாக்கி வேலாயுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சங்கர் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதேபோல் தஞ்சை மாவட்டம் இந்தலூர் நெடுங்குளம் பகுதியை சேர்ந்த ரங்கம்மாள்(45) கிளியூர் பகுதியில் சம்பா ஒருபோக நாற்று நடும் பணிக்காக வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மின்னல் தாக்கியதில் ரங்கம்மா பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு சம்பவங்களை பற்றி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு சென்று வேலாயுதம் மற்றும் ரங்கம்மாள் ஆகியோரின் உடல்களை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த சங்கரை சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY