குளோரோபார்ம் டேங்கரில் திடீர் தீ…. திருச்சி அருகே பயங்கரம்…

140
Spread the love

கடலூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் இவர் நேற்று புதுச்சேரியில் இருந்து தூத்துக்குடி வரை செல்வதற்காக லாரி ஒன்றில் குளோரோஃபார்ம் எனும் திரவத்தை ஏற்றி வந்துள்ளார். அவர் இன்று  திருச்சி பைபாஸ் சாலையில் மணிகண்டத்தை அளுந்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென அவரது லாரியில் தீ பற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் திடீரென சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் மெல்க்யூ ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதையடுத்து இந்த குளோரோபார்ம் திரவம் தூத்துக்குடியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது மருத்துவத்துறையில் குளோரோபார்ம் ஆபரேஷன் சிகிச்சை செய்யும் நோயாளிகளுக்கு மயக்க மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது காற்றில் பரவி இருந்தால் அக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்கள் மற்றும் சாலையில் செல்லக்கூடிய அவர்கள் அனைவருமே மயக்கநிலை அடைய நேரிடும் என்று போலீசார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இந்த கோர விபத்து தடுக்கப்பட்டது என்பதையும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY