தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்..?

739
Spread the love

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகியவற்றிற்கு தேர்தல் நடத்தி முடிக்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலை ஜனவரிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் காலகெடு விதித்துள்ளது. இதன் அடிப்படையில் டிசம்பர் இறுதிக்குள் தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முடிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் தள்ளி போக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் இயற்கை பேரிடர் காரணமாக அனுமதி கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அநேகமாக பிப்ரவரி மாத இறுதிக்குள் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.. 

LEAVE A REPLY