உள்ளாட்சி நடக்குமா? இன்று தெரியும்!

205
Spread the love

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் கடந்த 18ஆம் தேதி  நடந்த விசாரணையின்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிச. 13 ஆம் தேதிக்குள் மாநில தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி திமுக புதிய மனு தாக்கல் செய்தது. அதில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன் தொகுதி வரையறை மற்றும் இட ஒதுக்கீடு, சுழற்சி உள்ளிட்ட நடைமுறைகளை முடிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தது.

இந்நிலையில் நேற்று திமுக ஒரு புதிய மனு தாக்கல் செய்தது. அதில் தொகுதி வரையறை செய்யாமல் கடந்த 2 ஆம் தேதி மாநில தேர்தல்  ஆணையம் தேர்தல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும். அதுவரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

இதற்கிடையே நேற்று மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், முறையான சட்ட விதிகளின்படியே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. சட்ட விதிகள் மற்றும் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றித்தான் தேர்தல் நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீது இன்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY