உள்ளாட்சித் தேர்தல் எப்போது..? திமுகவின் அதிரடி முடிவு..

769
Spread the love

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை 4 மாதகாலத்திற்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் காலஅவகாம் வழங்கியுள்ளது. இதன் காரணமாக நகர்புற உள்ளாட்சித் தேர்தல்கள் வரும் ஜனவரிக்குள் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோகமாக வெற்றி பெற்றது. இதன் எதிரொலியாக சூட்டோடு சூடாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தலை நடத்தி முடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை டிசம்பருக்குள் நடத்தி முடிக்க வசதியாக தீபாவளி முடிந்த கையோடு நவம்பர் 10ம் தேதிக்குள் உள்ளாட்சித்தேர்தல் தேதி அறிவிக்க  முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. 

LEAVE A REPLY