ஓட்டுப்பெட்டி மீது கை வைத்த புதுகை ரவுடிக்கு குண்டாஸ்

205
Spread the love

கடந்த 27ம் தேதியன்று நடந்த உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவின்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் பெரிய மூலிப்பட்டி  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு அனுப்ப தயார் செய்யப்படும் அங்கு வந்த பெரிய மூலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி குடிபோதையில் தகராறு செய்ததோடு, வாக்கு பெட்டியை தூக்கிச் சென்று விட்டார். இது தொடர்பாக மண்டையூர் காவல் நிலையத்தில் மூர்த்தி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான மூர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அடுத்த 48 மணிநேரத்திற்குள் மூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்து கீரனூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

LEAVE A REPLY