உள்ளாட்சித் தேர்தல் அதிமுக விருப்ப மனு அறிவிப்பு

233
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் நவ.,15 மற்றும் 16ல் கட்சி அமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்தி, விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம்.  மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25 ஆயிரமும், வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், நகர்மன்ற தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும், நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500ம்,பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,500ம் விருப்ப மனு கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக விண்ணப்ப படிவங்களை பெறும் கட்சி நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY