புதுக்கோட்டையில் வாக்கு பெட்டியை தூக்கி சென்றவர்களை தேடும் போலீஸ்

201

ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் முதற்கட்டமாக நேற்று
நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு முடிந்து  மாலை 5 மணிக்கு வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு அறையில் பாதுகாப்பாக வைத்து பூட்டப்பட்டது. ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த ஊரான இலுப்பூரையடுத்த பெரிய மூளிபட்டியில் மர்ம நபர்கள் சிலர் பூட்டை உடைத்து வாக்கு பெட்டியை திருடிச் சென்றனர். இதனை அறிந்த போலீசார் அவர்களை விரட்டி சென்றனர் அப்போது வயலில். கிடந்த வாக்குப்பெட்டி மீட்ட போலீசார் அதனை தூக்கி சென்ற மூர்த்தியை விரட்டி பிடித்தனர்.

இதுகுறித்து இலுப்பூர் கோட்டாட்சியர் டெய்சிராணி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.பிடிபட்ட மூர்த்தியிடம் கீரனூர் போலீசார் விசாரணை நடத்தியதில் மூர்த்தி மற்றும் கருப்பையா,ஐயப்பன், சரவணன் ஆகிய நான்கு பேரும் வாக்கு பெட்டியை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 4 பேர்  மீதும் IPC 341,343,307, 379 பஞ்சாயத்து தேர்தல் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான மற்ற மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY