150 மாவட்டங்களில் முழு லாக்டவுன்..

811
Spread the love

கொரோனாவின் 2வது அலையில் சிக்கி உள்ள இந்தியாவில் தினசரி 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று(ஏப்.,27) மட்டும் 3.60 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். பலி எண்ணிக்கையும் இதுவரை இல்லாத அளவாக 3 ஆயிரத்தை தாண்டியது. பாதிப்பில், மஹாராஷ்டிரா முதலிடத்திலும், அதற்கடுத்த இடங்களில் உ.பி., கர்நாடகாவும் உள்ளன. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தற்போது 29 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். மஹாராஷ்டிரா, உ.பி., கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர் மற்றும் தமிழகத்தில் தலா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 8 மாநிலங்கள் மட்டும் தேசிய அளவில், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 69 சதவீதத்தை கொண்டு உள்ளது.இதனால் கவலை தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், 2வது அலை காரணமாக, கொரோனா பாதிப்பு 15 சதவீதத்திற்கு மேல் உள்ள 150 மாவட்டங்களில், முழு ஊரடங்கை அமல்படுத்தும்படி சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. இதற்கான முடிவு, உயர்மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான இறுதி முடிவை, மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசனை நடத்திய பின்னர், மத்திய அரசு எடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY