ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிப்பு – டாஸ்மாக் திறக்க அனுமதி

907
Spread the love

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீடிக்கப்பட்டு உள்ளது.  கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு உள்ளதால் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அதிக பரவல் இல்லாத 27 மாவட்டங்களில்…

  • டாஸ்டாக் கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
  • சலுான் கடைகள் குளிர் சாதன வசதி இல்லாமல் திறக்க அனுமதி. 
  • அரசு பூங்காக்களில் நடைபயிற்சி அனுமதி
  • வேளாண் உபகரணங்கள், பழுது நீக்கும் கடைகளுக்கு அனுமதி
  • கண் கண்ணாடி கடைகள் திறக்கலாம்.
  • மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள், பழுது நீக்கும் கடைகள் திறக்க அனுமதி
  • செல்போன் கடைகள் திறக்கலாம். 
  • கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள் திறக்கலாம்
  • பள்ளி, கல்லுாரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் நடைபெறலாம்
  • தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 10 பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும்

LEAVE A REPLY