வாக்கு பதிவு எந்திரங்கள் பூட்டி சீல் வைப்பு…..

126
Spread the love

திருச்சியில் 9 சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி நேற்று திருச்சி ஜமால் முகமது கல்லுாரி, சாரநாதன் பொறியியல் கல்லுாரி, ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி, துறையூர் இமயம் கல்லுாரி ஆகிய இடங்களில் நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து அனைத்து வாக்கு பதிவு எந்திரங்களும் மீண்டும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்கு பதிவு எந்திர பாதுகாப்பு கட்டிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அனைத்து வாக்கு பதிவு எந்திரங்களும் வைக்கப்பட்ட பின்னர் திருச்சி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நேரடி பார்வையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில்  பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதில் இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், மேற்கு வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 

LEAVE A REPLY