ஆளுநரை சந்தித்து பட்டியலை வழங்கினார் .. மு.க.ஸ்டாலின்…

422
Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 125 இடங்களில் வெற்றி பெற்று திமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அதில் திமுக சட்டமன்ற குழு தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கேட்க இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். அப்போது, சட்டமன்ற குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்காக எம்எல்ஏகள் கையெழுத்திட்ட கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். ஏற்கனவே திமுகவின் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு வரும் 7ம் தேதி இந்நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.. 

LEAVE A REPLY