நகராட்சி கழிப்பறையை சுத்தம் செய்த அமைச்சர்.. ம.பியில் பரபரப்பு

79
Spread the love

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் எரிசக்தி துறை அமைச்சராக இருப்பவர் பிரதியுமான் சிங் தோமர்.  நேற்று, குவாலியரில் உள்ள நகராட்சி கமிஷனர் அலுவலகத்திற்கு அமைச்சர் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் அமைச்சர் தோமர் குறைகள் கேட்டார். அப்போது ஊழியர்கள், அங்குள்ள கழிப்பறைகள் சுகாதாரமின்றி இருப்பதாக புகார் கூறினர்.

உடனடியாக அந்த கழிப்பறையை பார்வையிட்ட அமைச்சர் பிரதியுமான் சிங், அதை சுத்தம் செய்வதற்கான பொருட்களை தரும்படி, அதிகாரிகளிடம் கேட்டார். அவைகளை வைத்து அமைச்சர் கழிப்பறையை சுத்தம் செய்தார். பின்னர் ஊழியர்களை அழைத்து இப்போது பரவாயில்லையா? என கேட்ட அமைச்சர் பின்னர் காரில் புறப்பட்டு சென்றார். அமைச்சர் கழிப்பறை சுத்தம் செய்த விவகாரம் மபியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY