வாங்கிய கடனை கட்டல… மதுவந்தி வீட்டிற்கு சீல்…..

114
Spread the love

பா.ஜ.,வின் செயற்குழு உறுப்பினரும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான மதுவந்தி கடந்த 2016ம் ஆண்டு இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் 1 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இவர் சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2வது குறுக்கு தெருவில் உள்ள ஆசியானா அப்பார்ட்மெண்டில் சொந்தமாக வீடு வாங்கினார். சில மாதங்கள் கடனுக்கான தவணை கட்டிய மதுவந்தி, அதன்பின்னர் தொடர்ந்து தவணை பணம் கட்டவில்லை. இது தொடர்பாக நிதி நிறுவனஅதிகாரிகள் வட்டிப் பணத்துடன் அசலையும் சேர்த்து 1 கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 867 ரூபாய் பணம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனாலும், மதுவந்தி உரிய பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவனம் சார்பாக மெட்ரோ பாலிட்டன் அல்லிகுளம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, மதுவந்தியின் வீட்டை சீல் வைக்க உத்தரவு பெறப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவின் பேரில் தேனாம்பேட்டை எஸ்.ஐ., ரத்தினகுமார், தேவராஜ் ,  வக்கீல் வினோத் ஆகியோர் மதுவந்தியின் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். அந்த வீட்டின் சாவியை நிதி நிறுவனத்தின் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY