உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ. 2.94 கோடி பறிமுதல்…

96
Spread the love

மதுரை கரிமேடு காவல் நிலைய பகுதியில் நேற்று இரவு சந்தேகத்திற்கிடமான வகையில் காரிலிருந்து இறங்கி சென்றவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரன். இவர் நகைக்கடை உரிமையாளர். இதையடுத்து அவரை சோதனை செய்தபோது அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் 2 கோடியே 94 லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வருமானவரித் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது கரிமேடு போலீஸ் ஸ்டேசனில் விக்னேஷ்வரனிரிடம் விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY