உள்ளாடைக்குள் தங்கம்…விமான நிலையத்தில் திருச்சி பெண்கள் சிக்கினர்..

226
Spread the love

துபாயிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மதுரை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது திருச்சியை சேர்ந்த ஜெய்லானி(33), ஜெயராணி (35) ஆகியோர் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று முழு சோதனை நடத்தப்பட்டபோது, அவர்களின் உள்ளாடைக்குள் செயற்கை களிமண்ணில் சுமார் 1கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 53 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். இதனை அடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY