மதுரை குழந்தைகளின் ஆபாச படம் பதிவிறக்கம் செய்தவர் கைது….

140
Spread the love

மதுரை மாவட்ட ஆள்கடத்தல் குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு மதுரையில் ஒருவர் குழந்தை ஆபாச படம் பதிவிறக்கம் செய்து மற்றவர்களுக்கு அனுப்புவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்மண்டல ஐஜி, மாவட்ட எஸ்பி  உத்தரவின்படி விசாரணை நடத்தியதில் அய்யனார் என்ற நபரின் செல்போனில் இருந்து குழந்தைகளின் ஆபாசபடங்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து காவலர் கவிதா ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்து, வேடர்புளியங்குளத்தை அய்யனார் என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY