கபசுர குடிநீரை ஆய்வு செய்தீர்களா? அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

146
Spread the love

சித்த மருத்துவப் பொடியை பரிசோதித்து முடிவுகளை அறிவிக்கக் கோரி மதுரை சித்த மருத்துவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

1. கொரோனா தொற்றுக்கு எந்த அடிப்படையில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் பரிந்துரைக்கப்படுகிறது ?

2. அதிகரித்து வரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது ?

3. சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் கண்டுபிடிக்கும் மருந்துகளை பரிசோதிக்க என்ன நடைமுறை உள்ளது?

4. அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்த மருந்தை இதுவரை ஆய்வு செய்யாதது ஏன்?

5. கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயத்தை, எந்த பரிசோதனையின் அடிப்படையில் வழங்குகிறீர்கள்?

6. ஒருபுறம் சித்த மருந்தை வாங்கிக் கொண்டு, மறுபுறம் அதில் கண்டுபிடிக்கும் மருந்தை கண்டுகொள்ளாமல் விடுவது ஏன் ?

7. பல ஆயிரம் கோடியை மருத்துவக் காப்பீட்டுக்கு செலவிடும் அரசுக்கு, சித்த மருந்துகளை பரிசோதிப்பதில் என்ன தயக்கம் ?  

இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY