பிரஸ்சுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு பசுமை தீர்ப்பாயம் தடை..

296
Spread the love

மதுரையில் பத்திரிகையாளர்கள் வீட்டுமனைக்காக ஒதுக்கப்பட்ட இடம் புதுக்குளம் கண்மாய்ப்பகுதி என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், “நீர் நிலைகளை வேறு எந்த காரணத்துக்காகவும் பயன்படுத்தக் கூடாது. இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டதுடன் இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் பதில் அளிக்க வேண்டுமென்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையடுத்து வருவாய்த்துறை நில விடுவிப்பு பிரிவு அரசாணைகள் GO (Ms) No 329/2020, GO (Ms) No 76/2019 மதுரை மாட்டுதாவணி மற்றும் புதுக்குளம் கண்மாய் சர்வே 134/2, 134/2A நில ஒதிக்கீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கை ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

LEAVE A REPLY